ஐ.பி.எல் ஏல பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள இலங்கை வீரர்கள்!

Wednesday, December 12th, 2018

நடைபெறவுள்ள ஐ.பி.எல். ஏலத்துக்கான குறும்பட்டியலில் 226 இந்தியவீரர்கள் உட்பட 346 கிரிக்கட் வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்தபட்டியலின் படி 9 வெளிநாட்டு வீரர்கள் 2 கோடி இந்திய ரூபாவிற்கு பட்டியல்படுத்தப்பட்டுள்ளனர்.

லசித் மலிங்க, அஞ்சலோ மெத்தீவ்ஸ் ஆகிய இலங்கை வீரர்களுடன், ப்ரண்டன் மெக்கலம், க்றிஸ் வோக்ஸ், கொலின் இங்ராம், ஷோன் மார்ஸ், கோரி அன்டர்சன், சாம் கரன் மற்றும் டி ஆர்சி ஆகியோர் 2 கோடி இந்திய ரூபாவிற்கு பட்டியல்படுத்தப்பட்டவர்களாவர்.

இந்தமுறை 9 ஆப்கானிஸ்தான் வீரர்களும் ஏலத்திற்கு உள்வாங்கப்பட்டிருப்பதுடன், அமெரிக்காவைச் சேர்ந்த கிரிக்கட் வீரர் ஒருவரும் உள்வாங்கப்பட்டுள்ளார். அத்துடன் இலங்கையைச் சேர்ந்த 7 வீரர்கள் ஏலப்பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

குசல் பெரேரா 75 லட்சம் இந்திய ரூபாவிற்கும், திஸர பெரேரா, ஜீவன் மெண்டிஸ், தசுன் சானக்க மற்றும் இசுரு உதான ஆகியோர் 50 லட்சம் இந்திய ரூபாவிற்கும் ஏலப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106