ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பினார்!
Monday, April 22nd, 2019
தனிப்பட்ட விடயம் தொடர்பில் ஜனாதிபதி இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்றிருந்தார்.
சில மருத்துவ பரிசோதனைகளுக்காக ஜனாதிபதி மைத்திரி சிங்கப்பூர் சென்றிருந்தார். எனினும் நாட்டில் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து ஜனாதிபதி அவசரமாக நேற்று நள்ளிரவு சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு இலங்கை திரும்பியுள்ளார் என விமான நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான எஸ்.க்யூ 468 ரக விமானத்தில் ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
2017 இந்து சமுத்திர மாநாடு நாளை ஆரம்பம்!
வடமராட்சியின் பல பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் உதவித் திட்டங்கள் வழங்கிவைப்பு!
யாழ் வேலணையில் 40 Kg கஞ்சாவை நிலத்தடியில் புதைத்து மறைத்து வைத்த குற்றசாட்டில் மூவர் கைது
|
|
|


