2017 இந்து சமுத்திர மாநாடு நாளை ஆரம்பம்!
Thursday, August 31st, 2017
2017ம் ஆண்டுக்கான இந்து சமுத்திர மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. இந்த மாநாட்டில் இந்து சமுத்திர பிராந்தியத்தின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் ஆராயப்படும் என் அலரிமாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.
சமாதானம், முன்னேற்றம், அபிவிருத்தி என்ற தொனிப்பொருளில் இரண்டு நாட்களை கொண்டதாக அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துவைக்கவுள்ளார். இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளார்.
Related posts:
அடுத்த சந்ததிக்கு கடன் சுமையை சுமத்தமாட்டோம் - பிரதமர்!
ஒரே தடவையில் 14மருத்துவர்கள் வெளிநாட்டுக்கு பயணம்: விசாரணைக்கு அமைச்சர் பணிப்பு!
நிரூபம் சென் காலமானார்.
|
|
|


