மின்னல் தாக்கி 17 வயது சிறுவன் பலி – விசுவமடு தொட்டியடியில் துயரம்!
Saturday, April 20th, 2019
முல்லைத்தீவு – விசுவமடு தொட்டியடி பகுதியில் நேற்று பிற்பகல் மின்னல் தாக்கியதில் 17 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.
மழைக்காக நாவல் மரத்தின் கீழ் ஒதுங்கி நின்ற நிலையில், மரத்தின் மீது விழுந்த மின்னல் சிறுவார்கள் மீது தாக்கியுள்ளது.
சம்பவத்தில் தர்மபாலசிங்கம் தயானந்தன் (வயது-17) என்ற பாடசாலை சிறுவனே உயிரிழந்துள்ளான்.மேலும் எஸ்.கிருஷாந்தன் என்ற சிறுவன் காயமடைந்துள்ளான்.
உயிரிழந்தவரின் சடலம்தற்போது கிளிநொச்சி, தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Related posts:
வடக்கு மக்களின் சாட்சியங்கள் பரிந்துரைகளுடன் - மனித உரிமைகள் தொடர்பான ஆணைக்குழுவின் 2 ஆவது இடைக்கால ...
உணவுப் பாதுகாப்பையும் - போஷாக்கையும் உறுதி செய்து தன்னிறைவடைவோம் - தைப்பொங்கல் வாழ்த்து ஜனாதிபதி ரணி...
பேருந்தில் பெண்களுடன் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டு - யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் பொலசாரால் கைத...
|
|
|


