தபால் மா அதிபரின் அதிரடி : தபால் ஊழியர்களின் நிலை?
Friday, June 22nd, 2018
சேவையில் ஈடுபடும் தபால் ஊழியர்களுக்கு மாத்திரமே ஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என தபால் மா அதிபர் டீ.எல்.பீ ரோஹண அபேரத்ன அறிவித்துள்ளார்.
இன்னும் பணிக்கு திரும்பாமல் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை உடனடியாக மீண்டும் பணிக்கு திரும்புமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் பணிக்கு திரும்பாமல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஜூன் மாதம் 01 ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையான நாட்களுக்கு மாத்திரமே சம்பளம் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
2020 வரை ஜீ எஸ் பி வரி சலுகை - அமெரிக்க ஜனாதிபதி
புவி வெப்பநிலை அதிகரிக்கக்கூடுமென விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களைத் தடுக்க ஐ.நாவின் தலையீடு...
|
|
|


