மருந்து வகைகளின் விலைகள் பகுப்பாய்வு நடவடிக்கை இறுதிக்கட்டத்தில்!
Wednesday, April 17th, 2019
சந்தையிலுள்ள மருந்து வகைகளின் விலைகளை பகுப்பாய்வு செய்யும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குறுத்தல் அதிகார சபையின் விலை கட்டுப்பாட்டுக்கு குழு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
அரசாங்கம் இதுவரை 73 மருந்து வகைகளின் விலைகளை ஒழுங்குறுத்தியிருக்கிறது. புற்றுநோயாளர்கள் பயன்படுத்தும் 95 சதவீதமான மருந்துகளை அரசாங்கம் கொள்வனவு செய்கிறது. புற்றுநோய் மருந்துகளுக்கான விலை மனுக்கோரலின் போது சமர்ப்பிக்கக் கூடிய உயர்ந்தபட்ச விலை 95 ரூபாவாகும் என்ற சுற்றுநிரூபத்தையும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
மேலும் 27 மருந்து வகைகளின் விலைகளும் ஒழுங்குறுத்தப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
Related posts:
சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் விஸ்தரிப்பு!
சட்டத்துறை ஆசிரியர்களை சட்டத்தரணியாக சேவையாற்ற அனுமதிக்க வேண்டும் - அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் ச...
நீதிமன்றினால் விதிக்கப்படக்கூடிய அதிகபட்ச அபராதத் தொகையை. அதிகரிக்கும் சட்ட மூலம் குறித்த வெளியானது ...
|
|
|


