அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து – குழந்தைகள் உட்பட 10 பேர் பலி!
Wednesday, April 17th, 2019
பதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இன்று(17) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தியதலாவையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
வேனில் 12 பேர் பயணித்துள்ளதுடன், அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
மத்திய வங்கியினால் கண்காணிக்கப்படும் நிறுவனங்களின் தடயவியல் கணக்காய்வுகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமத...
மழையுடன் கூடிய காலநிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்!
இலங்கையின் கடல் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு - கடற்படைத் தளபதி!
|
|
|


