பண்டிகையை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிட 05 நாட்கள்!
Saturday, April 13th, 2019
புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிட வரும் சிறைக்கைதிகள் குடும்பங்களுக்காக இம்முறை 05 நாட்களை ஒதுக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் 17 ஆம் திகதி வரை சிறைக்கைதிகளை பார்வையிட சிறைக்கைதிகள் குடும்பத்தினருக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் தமிழ் சிங்கள புத்தாண்டில் சிறைக்கைதிகள் குடும்பங்களுக்கு சிறைக்கைதிகளை பார்வையிட புத்தாண்டு தினம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் பெண் அரசியல் பிரதிநிதிகளுக்கு விசேட பயிற்சி வழங்கும்...
9 ஆயிரம் முச்சக்கரவண்டிகள் பதிவு - வரிசைகள் இவ்வாரம் குறைவடையும் எனவும் நம்பிக்கை!
11,000 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் - உடனடியாக விசாரிப்பதற்கான வேலைத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளதா...
|
|
|


