பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும்போது முறையற்ற விதத்தில் பணம் பெறல் தடை!
Tuesday, April 9th, 2019
தரம் 06 இற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் போது ஆலோசனைகள் மற்றும் சேவைக் கட்டணம், பாடசாலை அபிவிருத்தி சங்க கட்டணம் ஆகியவை தவிர்ந்த மேலதிக பணம் அல்லது வேறு நன்கொடைகளை பெற்றுக் கொள்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து, 08/2019 எனும் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இன்று(09) வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தரம் 06 இற்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளும் போது முறையற்ற விதத்தில் பணம் கோரல் உள்ளிட்டவையும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இன்று இந்திய பிரதமர் இலங்கை விஜயம்!
இந்திய புலமைப்பரிசில் திட்டம் - 2023 - 2024 கல்வி ஆண்டுக்கான விண்ணப்பம் கோரல்!
யாழ்ப்பாணத்திலிருந்து காரைநகரை சென்றடையும் 785/1 பேருந்து சேவை இன்றுமுதல் ஆரம்பம்!
|
|
|


