பிபா கவுன்சில் உறுப்பினராக முதல் தடவையாக இந்தியர் தேர்வு!
Tuesday, April 9th, 2019
சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிபாவின் கவுன்சில் உறுப்பினராக இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான பிரபுல் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியர் ஒருவர் பிபா கவுன்சில் உறுப்பினராக தேர்வாவது இதுவே முதல் முறையாகும். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஆசியன் கால்பந்து கான்ஃபெடரேஷன் கூட்டம் நடைபெற்றது.
இதில், பிபா கவுன்சில் உறுப்பினர் பொறுப்புக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், இந்திய கால்பந்து சம்மேளனத்தின் செயலர் குஷல் தாஸ், மூத்த துணை தலைவர் சுப்ரதா தத்தா, பிரபுல் படேல் உள்பட 8 பேர் போட்டியிட்டனர்.
46 வாக்குகளில் 38 வாக்குகளை பெற்ற பிரபுல் படேல், பிபா கவுன்சில் உறுப்பினர் பொறுப்புக்கு தேர்வானார்.
Related posts:
முதலிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ!
கிண்ணத்தை தனதாக்கியது வவுனியா இந்துக் கல்லூரி!
உயிர்களுடன் விளையாடுகின்றது ஸ்ரீலங்கா கிரிக்கெட்: மஹேல!
|
|
|


