20 வகையான மருந்துகளின் விலைகள் குறைப்பு – சுகாதார அமைச்சு!

Tuesday, April 9th, 2019

எதிர்வரும் 3 வாரங்களுக்குள் மேலும் 20 வகையான மருந்துகளின் விலைகளைக் குறைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு விலை குறைக்கப்படும் மருந்துகளில் புற்றுநோய்க்கான மருந்துகளும் உள்ளடங்குகின்றன.

இதேநேரம், சந்தைகளில் குறித்த மருந்துகளின் சந்தை விலைகளைத் திரட்டும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக மருந்துகளின் விலைகளை நிர்ணயிக்கும் குழுவின் தலைவர், டொக்டர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இதுவரை பல்வேறு சந்தர்ப்பங்களில் மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

Related posts:

யாழ்ப்பாணத்திற்கு அதிவேக நெடுஞ்சாலை - பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்!
பிரச்சினைகளை துரிதமாக தீர்க்கும் வேலைத்திட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் வழங்கும் ஆதரவுக்கு பிரதமர் மஹிந...
கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம் - மேற்கத்தேய நாடுகளிடம் ஜனாத...