தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு!
Thursday, March 28th, 2019
தமது பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சர் மற்றும் நிர்வாக அதிகாரிகள் தீர்வு வழங்காமை உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து, நேற்று முன்தினம்(26) முதல் தாதியர்கள் சிலர் முன்னெடுத்த சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை இன்று(28) காலை 8 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
குறித்த போராட்டம் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளின் சேவைகளும் பாதிக்கப்பட்டதுடன், நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு முகம் கொடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றன.
இருப்பினும் இன்று தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க சுகாதார அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், நாடளாவிய ரீதியில் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Related posts:
ஜனாதிபதியுடன் தொடர்ந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானம்!
அரசாங்கத்திற்கு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்த முயன்றால் மீண்டும் நீதிமன்றம் செல்வோம் - எச்சரிக்கின்றது பெப்ரல் அ...
|
|
|


