கர்ப்பிணி தாய்மாருக்கான சுகாதார அமைச்சின் விசேட ஆலோசனை!
Saturday, March 23rd, 2019
கர்ப்பிணி தாய்மார் அல்லது பிரசவத்துக்கு பின்னர் தாய்மாருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனே வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டும் என சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
தற்பொழுது பரவி வரும் டெங்கு மற்றும் இன்புளுவென்சா நோயினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார் ஏனையவர்களிலும் பார்க்க அபாய நிலைக்கு உள்ளாகக்கூடும்.
குடும்ப சுகாதார பணியகத்தின் தகவல்களுக்கு அமைவாக, இந்த வருடத்தில் இன்புளுவென்சா, நியுமோனியா நோயினால் இரு தாய்மார் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.
2018ஆம் ஆண்டில் 11 கர்ப்பிணி பெண்கள் நியுமோனியா காரணமாக உயிரிழந்துள்ளதுடன், 2017ஆம் ஆண்டில் டெங்கு மற்றும் இன்புளுவென்சா நோயின் காரணமாக 41 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர்.
கர்ப்பிணி தாய்மார், காய்ச்சல் உள்ளிட்ட நோய் காணப்படுவோருக்கு அருகாமையில் செல்வதை தவிர்த்து கொள்ளவேண்டும். சன நெரிசல் உள்ள இடங்களிலும் தங்கியிருப்பதை தவிர்த்துக்கொள்வதுடன் முறையான சுவாச செயற்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
காய்சலினால் பாதிக்கப்பட்ட தாய்மாரை முதல் நாளிலேயே வைத்தியசாலைக்கு அனுமதிப்பதற்கு சகல வைத்திய நிறுவனங்களுக்கும் அரசாங்க மற்றும் தனியார் வைத்தியர்களுக்கும் வெளி நோயாளர் சிகிச்சை பிரிவுகளுக்கும் குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளுக்கும் ஏற்கெனவே ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காய்சலினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி அல்லது பிரவசத்துக்கு பின்னரான தாய்மார் முதல் நாளிலேயே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு விஷேட சிகிச்சையை வழங்கமுடியும் என்று சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106