ONLINE மூலம் நடத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப பரீட்சை வெற்றி!
Saturday, March 23rd, 2019
பாடசாலை பரீட்சைகளுக்காக இம்முறை ஒன்லைன் மூலமாக நடத்தப்பட்ட உயர்தரம் மற்றும் சாதாரண தர தொழில்நுட்ப பரீட்சை வெற்றியடைந்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
கடந்த 11ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நடைபெற்ற இந்த பரீட்சைக்கு, நாடு முழுவதிலும் உள்ள 655 கணணி மத்திய நிலையங்களில் 186 000 மாணவர்கள் தோற்றினர்.
எதிர்காலத்தில் செயல்திறன் பரீட்சை கல்வி பொது தராதர மற்றும் உயர்தரப்பரீட்சைகளில் செயல்திறன் பரீட்சைகளை இவ்வாறு நடத்துவதற்கும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
35 ஆயிரம் கிலோ பனம் வெல்லத்தை 2018 இல் உற்பத்தி செய்ய நடவடிக்கை!
இலங்கையை உலகின் முக்கிய கப்பற் போக்குவரத்து கேந்திர நிலையமாக முன்னேற்ற முடியும் - ஜனாதிபதி
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது!
|
|
|


