பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 6 பேர் படுகாயம்!
Friday, March 22nd, 2019
கொழும்பு – புத்தளம் பிரதான வீதி கலா ஓயா பகுதியில் நேற்று இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 6 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பற்ற முறையில் லொறி ஒன்று பாதையில் குறுக்கே பயணித்ததன் காரணமாக குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
போராட்டத்திற்கு தயாராகும் மின்சார சபை ஊழியர்கள்!
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பிலான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி - அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்யுமாறு முன...
மாணவர்களின் பரீட்சையை குழப்பும் ஹர்த்தால் எதற்கு? – நாளை பரீட்சைகள் நடைபெற வேண்டும் என பொற்றோர் வலிய...
|
|
|


