இலங்கை – அவுஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம்!
Sunday, March 17th, 2019
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள குறித்த வேலைத் திட்டம் ஒரு வார காலத்திற்கு இடம்பெறும். இதன் கீழ் அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான நான்கு கப்பல்கள் இலங்கை வரவுள்ளன.
கம்பெரா மற்றம் நியூகாசெல் ஆகிய இரண்டு கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளதுடன், மேலும் இரண்டு கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு வரவுள்ளன.
அவுஸ்திரேலியாவின் சுமார் 10 ஆயிரம் முப்படை வீரர்கள் இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தில் பங்கு கொள்ளவுள்ளனர்.
அவர்கள் இலங்கையில் முப்படையினருடன், மனிதநேய சேவைகள், அனர்த்தமுகாமை சேவைகள், கடல்வள பாதுகாப்பு, அமைதி காக்கும் வேலைத் திட்டங்கள் பலவற்றில் ஈடுபடவுள்ளனர்.
Related posts:
யாழ் பல்கலையில் புதிய கட்டடம் நிர்மாணிக்க நடவடிக்கை
அரசியலமைப்பு சபை நாளை கூடுகிறது!
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை நடத்தும் மேலும் 8 நிறுவனங்கள் - விபரங்களை வெளியிட்டது இலங்கை மத்த...
|
|
|


