இலங்கையில் குறைந்த விலையில் நவீன கார்!

Friday, March 15th, 2019

இலங்கையில் குறைந்த விலையில் புதிய வகை கார் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையர்களின் கார் கனவை நனவாக்கும் வகையில் இந்த வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 11 இலட்சம் ரூபாவுக்கு இந்த வாகனத்தை கொள்வனவு செய்ய முடியும். குடும்பம் ஒன்று பயணிப்பதற்கு ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தில் DTSi தொழில்நுட்பத்திலான இயந்திரம் ஒன்றும் 216.6 CM3 திறன் கொண்ட இயந்திரமும் பொருத்தப்பட்டுள்ளது.

போதுமான இட வசதிடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தில் சாரதி மற்றும் பயணிகள் அனைவரும் வசதியாக பயணிக்க முடியும்.

இந்த வாகனம் காபன் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தாத வகையில் இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனத்தின் இலங்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த வாகனத்திற்கு ஐரோப்பாவின் WVTA சான்றிதழும் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தற்போது ஐரோப்பிய நாடுகளான துருக்கி, போலந்து, போர்த்துக்கல், ரஷ்யா, வட அமெரிக்கா, மெக்சிகோ, கொலம்பியா, தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ், இந்தோனேஷியா உட்பட 32 நாடுகள் இந்த Bajaj Qute என்ற வாகனத்தை கொள்வனவு செய்துள்ளன.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106