வடக்கின் போர் : சென்.ஜோன்ஸ் முதல் இன்னிங்ஸில் 181 ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பு!
Thursday, March 7th, 2019
வடக்கின் போரில் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் 181 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுக்களையுமிழந்தது.
‘வடக்கின் போர்’ என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும். இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி இன்று காலை கோலாகலமாக ஆரம்பமானது.
இரண்டு கல்லூரிகளின் முதல்வர்கள் தலைமையில் ஆரம்பமான இந்தப் போட்டியில் வீரர்கள் அறிமுகத்தையடுத்து நாணயச்சுழற்சி இடம்பெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் தலைவர் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.
அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் 181 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுக்களையுமிந்தது.
இதனையடுத்து ஆட்டம் தேனீர் இடைவேளைக்காக இடைநிறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருந்த நிலையில் இன்றைய ஆட்டநேர முடிவுவரை 2 இலக்குகளை இழந்து 59 ஓட்டங்களை பெற்றுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106