மோப்பநாய்களுக்கு விசேட பயிற்சி!
Tuesday, March 5th, 2019
ஹெரோயின், கொக்கெய்ன் ஆகிய போதைப்பொருள் கடத்தல்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளுக்காக 70 பொலிஸ் மோப்பநாய்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் மோப்பநாய்கள் பிரிவில் 222 நாய்கள் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றன.
அவற்றில் 70 நாய்களே, போதைப்பொருள் கடத்தலை சுற்றிவளைப்பதற்காக பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றில் 60 நாய்கள் வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு, விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகங்களில் பொலிஸ் மோப்பநாய்களின் பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் காலத்தில் போதை வில்லைகளை கைப்பற்றுவதற்காக நாய்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Related posts:
2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு நாட்டின் வறுமை ஒழிப்பின் ஆரம்ப புள்ளியாகும் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிப...
உலக நலனுக்காக உணவுக் கட்டமைப்பை நிலையானதாக மாற்ற வேண்டும் – ஐநாவில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வலியுறு...
அதிபர் ஹஸ்ரன்ரோய்க்கு வேலணை மத்தியில் பிரிவுபசாரம் - யாழ். மத்தியின் புதிய அதிபராக திங்களன்று பதவியே...
|
|
|


