அதிபர் ஹஸ்ரன்ரோய்க்கு வேலணை மத்தியில் பிரிவுபசாரம் – யாழ். மத்தியின் புதிய அதிபராக திங்களன்று பதவியேற்பு!

Friday, July 24th, 2026


….
வேலணை மத்திய கல்லூரியின் அதிபராகப் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி, பாடசாலையின் நிர்வாகத்தை மிகச் சிறப்பாக முன்னெடுத்து வந்த திரு. வி.இ.ஹஸ்ரன்ரோய், வருடாந்த இடமாற்றத்தின் மூலம் அக் கல்லூரியிலிருந்து விடைபெறுகின்றார்.

விடைபெற்றுச் செல்லும் அதிபரை வழியனுப்பி வைக்கும் முகமாக, அவருக்கான பிரிவுபசார விழா இன்று பாடசாலைச் சமூகத்தினரால் மிகச்சிறப்பாக வழங்கப்பட்டது.

​இலங்கை அதிபர் சேவை தரம் 1 நிலை அதிபரான இவர், தான் பணியாற்றிய காலப்பகுதியில் வேலணை மத்திய கல்லூரியின் கல்வி மற்றும் நிர்வாக வளர்ச்சியில் மிக காத்திரமான பங்கை முன்னெடுத்திருந்தார்.

இதேநேரம், இடமாற்றம் பெற்றுச் செல்லும் திரு. வி.இ.ஹஸ்ரன்ரோய் அவர்கள், தான் முன்பு கல்வி கற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். மத்திய கல்லூரியின் புதிய அதிபராக நியமனம் பெற்றுள்ளார்.

​இந்நியமனத்தைத் தொடர்ந்து, எதிர்வரும் திங்கட்கிழமை அன்று அவர் யாழ். மத்திய கல்லூரியின் அதிபராக உத்தியோகபூர்வமாகப் பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106