தேசிய அடையாள அட்டை விநியோகம் ஆரம்பம்!

Tuesday, March 5th, 2019

இந்த ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு, பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஆட்பதிவுத் திணைக்களத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள இடங்களில் அடையாள அட்டைக்கான நிழற்படங்களை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts:


ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதனின் சேவை மறக்கமுடியாததொன்று - உதவிக்கல்விப்பணிப்பாள...
3 ஆயிரத்தை நெருங்கியது சமையல் எரிவாயுவின் புதிய விலைகள் – கோதுமை மா, சிமெந்தின் விலைகளும் நள்ளிரவுமு...
அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெற்றோர்களினால் பாடசாலை நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டம்...