ஆப்கானிஸ்தானில் கன மழை – பலர் பலி!
Monday, March 4th, 2019
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்தும் பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை சிறுவர்கள் உள்பட 20 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள காந்தஹார் மாகாணத்தில் கடும் மழை பெய்து வருகிறது.
இதனால் நீர்நிலைகள் பெருக்கெடுத்து அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை மீட்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
Related posts:
சிரியாவில் ஐ.எஸ் நிலைகள் மீது துருக்கி தாக்குதல்!
சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 12 பேர் உயிரிழப்பு!
இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு சொந்தமான கட்டடம் ஒன்றில் தாக்குதல் - இலங்கையர்கள் பாதுகா...
|
|
|


