மக்கள் உணராதவரை நிரந்தர தீர்வை வெற்றிகொள்வது சுலபமானதல்ல – கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மத்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, March 2nd, 2019

சுயநலமற்றவகையில் மக்கள் சேவையை மேற்கொள்ளும் தரப்பினரிடம் தமிழ் மக்கள் தமது அரசியல் அதிகாரங்களை வழங்காதவரை எமது இனம் நிரந்தரமான தீர்வை பெற்றுக் கொள்வதென்பது சுலபமானதாக அமையப்பெறாது என எண்ணுவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாக செயற்பாட்டாளர்களுடனான விஷேட சந்திப்பொன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

எமது கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரது செயற்பாடுகளும் கட்சியின் கொள்கை நடைமுறைகளுக்கு இணங்க மக்களது நலன்களை முன்னிறுத்தியதாக அமைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

நாம் முன்வைத்துவந்த வழிமுறையையே இன்று தமிழ் தரப்பினர் அனைவரும் ஏற்றுக்கொண்டு முன்னெடுத்து வருகின்றனர். ஆனாலும் எமது பொறிமுறைக்கு அவர்கள் இன்னமும் வராதிருப்பதே பல பிரச்சினைகளுக்கு காரணம்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னர் இருந்த அரசுகள் தமிழ் மக்களை மாற்றான்தாய் பிள்ளைகளாக பார்த்ததே அன்று எமது இனம் போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

நாம் பதவிகளுக்காக வெறுமனே வேதமோதும் சாத்தான்கள் கிடையாது. மக்களது தேவைகளையும் அவர்களது அபிலாஷைகளையும் நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளும் பொறிமுறைகளும் எம்மிடம் உள்ளது. ஆனாலும் அதை நிறைவுசெய்து கொடுப்பதற்கான அரசியல் அதிகாரம் எம்மிடம் போதாமல் இருப்பதே அதை முழுமையாக செயற்படுத்தி சாதித்துக்காட்ட முடியாதுள்ளது.

முயற்சிகள் என்பது ஒவ்வொரு வெற்றியினதும் படிக்கற்களாகவே இருந்துள்ளதாக வரலாறுகள் சொல்கின்றன. அந்தவகையில் நாம் எமது மக்களின் அபிலாஷைகளை வெற்றிகொள்ளும் முயற்சிகளை மேற்கொள்வதில் இடையூறுகள் வரலாம் ஆனால் அவற்றை எல்லாம் தாண்டி இன்றுவரை பல தேவைப்பாடுகளை செய்து சாதித்துக் காட்டியிருக்கின்றோம்.

அதுமட்டுமல்லாது நாம் மக்களுக்காக முன்னெடுக்கும் ஒவ்வொரு செயற்பாடுகளும் நன்கு உழுது பண்படுத்திய நிலத்தில் தான் விதைத்து பயன்களை பெற்றுக் கொடுத்து வருகின்றோம்.

அந்தவகையில் மக்கள் தமக்கான அரசியல் தீர்வையும் அபிவிருத்திசார் தேவைகளையும் பெற்றுக்கொடுக்கக் கூடிய தரப்பாக எம்மிடம் அரசியல் அதிகாரங்களை வரவுள்ள சந்தர்ப்பத்தில் தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அவ்வாறு வழங்கும் பட்சத்தில் நிச்சயம் நாம் குறுகிய காலத்தில் தமிழ் மக்களது அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வகளை வென்றெடுத்துக் காட்டுவோம் என்றார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106