ஆலய திருவிழாவில் பட்டாசு வெடித்து இளைஞன் படுகாயம்!
Saturday, March 2nd, 2019
யாழ். குரு நகர் 5 மாடிக்குடியிருப்பிற்கு அருகில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலய திருவிழாவில் பட்டாசு கொளுத்திய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் பட்டாசு கொளுத்திய போது அவரின் வலது கையில் உள்ள ஐந்து விரல்களிலும் எரிகாயம் ஏற்பட்டுள்ளது.
பெருமளவான பட்டாசுகள் இந்த சந்தர்ப்பத்தில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞன் யாழ். போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
நல்லூரின் பாதுகாப்புக்கு 500 பொலிஸாருடன் 25 பாதுகாப்பு கமராக்கள்!
இலங்கை யுத்தம் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட பாகிஸ்தான் செயற்பாட்டாளர் காலமானார்!
தமிழ் மொழியில் சித்தி பெறாததால் காலியாகவுள்ள 5,536 வெற்றிடங்கள்!
|
|
|


