கிளிநொச்சியில் 14 வயது சிறுவன் மாயம்!
Saturday, March 2nd, 2019
கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனை கடந்த 24 ஆம் திகதி முதல் காணவில்லை என சிறுவனின் தந்தையால் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் கோணேஸ்வரன் கோகுலன் (டிலான்) என்ற சிறுவனே கடந்த 24ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.
தேவாலயம் ஒன்றுக்குச் சென்றுவருவதாக தெரிவித்து சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என தந்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த தந்தை மகன் தொடர்பில் தகவலறிந்தால் தன்னுடைய 0779240145 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து அறியத் தருமாறும் தயவுடன் கோரி நிற்கின்றார்.
Related posts:
GSP பிளஸ் வரிச்சலுகையால் 1400 உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பு!
மாணவர்களை திறமைசாலிகள் திறமையற்றவர்கள் என்று வேறுபடுத்தும் கல்விமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தப்படும் ...
பவளப்பாறைகளை சுத்திகரிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் முன்னெடுப்பு !
|
|
|


