தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுவது என்பது உண்மைக்கு புறம்பான செய்தி!
Friday, March 1st, 2019
புதிய தொலைத் தொடர்பு சட்டத்தின் கீழ் சகல தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என தொலைத் தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தொலைபேசி அழைப்புக்கள் பதிவு செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்கள் ஊடக போலி வதந்திகள் பரப்பபடுகின்றன.
அத்துன் வட்சப், வைபர், உள்ளிட்ட ஏனைய சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் புதிய தொலைத்தொடர்பு சட்டங்களுக்கமைய கண்காணிக்கப்படுவதாக அந்த தகவல் தெரிவிக்கின்றன.
அவ்வாறான எந்தவொரு கண்காணிப்பும், பதிவு செய்தலும் இடம்பெறுவதில்லை என தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Related posts:
08 மணி முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
வட மாகாண அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இடமாற்றம்!
கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் தொழிற்கல்வி பாடங்களுக்காக மாணவர்களை இணைப்பதற்கு விண்ணப்பங்கள் கோரல்...
|
|
|


