மே மாதம் 8 ஆம் திகதி தென் ஆப்பிரிக்காவில் பொதுத்தேர்தல்!
Thursday, February 28th, 2019
தென் ஆப்பிரிக்காவில் எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அதிபர் சிரில் ராமபோசா அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக் கொள்கை 1994ஆம் ஆண்டு முடிவுற்ற பிறகு, ஜனநாயகபூர்வமான முறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
பாராளுமன்ற கீழ் சபையில் (தேசிய சபை) பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவரே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
அந்தவகையில், மே 8-ம் திகதி பொதுத்தேர்தல் (தேசிய சபை தேர்தல்) நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி தேசிய சபை கலைக்கப்பட்டது. அதன்பின்னர் தேர்தல் நடைமுறைகள் தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
சார்க் நாடுகளின் மூத்த அதிகாரிகள் இந்த வாரம் நேபாளத்தில் ஒன்று கூடல்!
ஹொம்ஸ் மாகாணம் சிரிய இராணுவத்தால் மீட்பு!
அனைத்து விமான நிலையங்களுக்கும் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை!
|
|
|


