நடைமுறைக்கு வருகின்றது புதிய விசா!

Thursday, February 28th, 2019

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படும் காலப்பகுதிகளில் சுற்றுலா பயணிகளை பெருமளவில் நாட்டுக்கு அழைக்கும் வகையில் புதிய விசா நடைமுறையை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஏப்ரல் மாதம்முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்த வீதத்தை கொண்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

வெசாக் மற்றும் நோன்மதி வைபவம் மற்றும் எசெல பெரஹர போன்ற பௌத்த மத வைபவங்களும் கலாசார நிகழ்வுகளும் நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதனடிப்படையில் தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளின் பௌத்த சுற்றுலா பயணிகளை கவரக்கூடியதாகயிருக்கும் என எதிர்பாக்கப்படுகின்றது.

இதனை கவனத்தில் கொண்டு 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 6 மாதக் காலப்பகுதிக்கு தாய்லாந்து சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வசதிகளை வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக தாய்லாந்து சுற்றுலா பயணிகளைப் போன்று ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உட்பட்ட நாடுகளான பிரிட்டன் அவுஸ்திரேலியா தென்கொரியா கனடா அமெரிக்கா சிங்கப்பூர் மலேசியா தாய்லாந்து ஆகிய நாடுகளில் சுற்றுலா பயணிகளுக்கு இந்த வசதியை வழங்குவதற்குமாக சுற்றுலா அபிவிருத்தி வன ஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்கள் முன்வைத்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106