வறிய மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் கூரைத்தகடுகள் வழங்கிவைப்பு.!
Wednesday, July 6th, 2016
வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்கள் ஒருதொகுதியினருக்கான தற்காலிக தேவைகளை நிவர்த்தி செய்து கொடுக்கும் முகமாக கொக்குவில் கிழக்கு ஜே-122 கிராம சேவகர் பிரிவக்குட்பட்ட ஒருதொகுதி மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பகுதி நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் அவர்களால் கூரைத்தகடுகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது..
வறிய மக்களது அடிப்படை தேவைகளை தற்காலிகமாக பூர்த்திசெய்யும் வகையில் முன்னேடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக குறித்த பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஒருதொகுதி மிக வறியமக்களுக்கான கூரைத்தகடுகளே இவ்வாறு வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது கட்சியின் பிரதேச நிர்வாகக்குழு உறுப்பினர்களான பிரதீபன், இரஜீவன் , ஜெயந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Related posts:
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப அச்சமடைய வேண்டாம் - கல்வி அமைச்சின் செயலாளர் கோரிக்கை!
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு - முன்மொழியப்பட்ட வரைபடத்திற்கும் கால அட்டவணைக்கும் அமைச்சரவை அங்கீக...
உள்ளூராட்சி தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வது நடைமுறை சாத்தியம் இல்லை...
|
|
|
நாளைமுதல் தொடருந்து ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு - தொடருந்து திணைக்கள பிரதி பொது முகாமையாளர் ...
அரசாங்கமும் ஜனாதிபதியும் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஆதரவு - முன்னாள் ஜனாத...
இலங்கை வரும் சீனாவின் பயிற்சி கப்பல் - கடல்சார் சமூகத்தைக் கட்டியெழுப்ப சீனாவின் பரந்த முயற்சியின் ஒ...


