டி20 போட்டி: ஆப்கானிஸ்தான் அணி உலக காதனை!
Sunday, February 24th, 2019
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், ஹஸ்ரத்துல்லா அதிரடி சதத்தால் ஆப்கானிஸ்தான் அணி 278 ஓட்டங்களை குவித்து உலக சாதனை படைத்துள்ளது.
டேராடூனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கான் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
தொடக்க வீரர்களாக ஹஸ்ரதுல்லா ஸஸாய், உஸ்மன் கானி களமிறங்கினர். ஸஸாய் சிக்ஸர்களாக விளாசி அயர்லாந்து பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கினார்.
அவருக்கு துணையாக கானியும் பவுண்டரிகளை அடித்து ஓட்டங்களை குவித்தார்.
கானி 48 பந்துகளில் 73 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 236 ஓட்டங்கள் குவித்தது.
அடுத்து வந்தவர்கள் சொதப்பினாலும், ஸஸாய் தொடர்ந்து அதிரடியாய் விளையாடி ஓட்டங்களை குவித்தார்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ஓட்டங்கள் குவித்தது.
ஸஸாய் 62 பந்துகளில் 162 ஓட்டங்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவர் 16 சிக்ஸர்களையும், 11 பவுண்டரிகளையும் அடித்து மிரட்டினார். இறுதியில், ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ஓட்டங்கள் குவித்து சாதனை புரிந்துள்ளது.
• டி20 போட்டிகளைப் பொறுத்தவரை அதிகப்பட்ச ஸ்கோர் – 278
• டி20 போட்டிகளில் அதிகபட்ச பார்னர்ஷிப் – 236 (ஸஸாய்-கானி)
• தனிப்பட்ட நபரின் அதிகபட்ச சிக்ஸர் – 16
• ஒரு அணியாக அதிகபட்ச சிக்ஸர் – 22
• தனிப்பட்ட நபரின் 2வது அதிகபட்ச ஸ்கோர் – 162 ஸஸாய்
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106