பயங்கரவாதத் தாக்குதலில் பலியான இராணுவ வீரர்களின் கல்விச் செலவை ஏற்கும் ஷேவாக்!

Tuesday, February 19th, 2019

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு விளையாட்டு பிரபலங்கள் ஆதரவுகரம் நீட்டி வருகிறார்கள்.

 ‘உயிர்தியாகம் செய்த இந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நாம் எது செய்தாலும் போதுமானதாக இருக்காது. ஆனால் குறைந்தது என்னால் முடிந்த உதவியாக வீரமரணம் அடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களை எனது பெயரில் உள்ள ‘ஷேவாக் சர்வதேச பாடசாலைகளில் படிக்க வைக்கிறேன்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், குறிப்பிட்டுள்ளார்.

இரானி கிண்ணத்தை வென்றதன் மூலம் கிடைத்த பரிசுத்தொகையை, தாக்குதலில் பலியான இராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்குவதாக விதர்பா அணியின் தலைவர் பைஸ் பாசல் அறிவித்து இருக்கிறார். இதே போல் அரியானா காவல்துறையில் பணியாற்றும் இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும், இதே போல் ஒவ்வொருவரும் இராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

விராட் கோலியின் பவுண்டேசன் மற்றும் ஆர்.பி.-சஞ்ஜிவ் கோயங்கோ குரூப் சார்பில் டெல்லியில் நேற்று விளையாட்டு விருது வழங்கும் விழா நடப்பதாக இருந்தது. ஆனால் இராணுவ வீரர்களை இழந்து வாடும் இந்த வேதனையான தருணத்தில் இந்த விழாவை நடத்துவது சரியாக இருக்காது என்பதால் அந்த விழாவை வேறுஒரு நாளுக்கு தள்ளிவைப்பதாக விராட் கோலி டுவிட்டரில் கூறியுள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106