ரிக் ரொக் செயலிக்கு விரைவில் தடை!
Friday, February 15th, 2019
இளைஞர், யுவதிகள் மத்தியில் பிரபலமாக பயன்படுத்தப்படும் ரிக் ரொக் அப்பினை தமிழகத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரிக் ரொக் எனப்படும் செயலியால் மாணவர்கள், பெண்கள் சீரழிந்து வருகின்றனர்.
மேலும் இந்தச் செயலியினால் உருவாகும் வீடியோக்கள் பல வன்முறையைத் தூண்டி விடுகின்றன. சமுதாய சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. வெளியாகும் வீடியோக்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. எனவே அரசு இந்த ரிக் ரொக செயலியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் இதற்கு முன்னர் ப்ளுவேல் கேம் என்ற உயிரை கொல்லும் விளையாட்டானது தடை செய்யப்பட்டது. அதேபோல் இந்த ரிக் ரொக் அப்பின் தலைமை இடம் எங்கிருக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டு அந்த அப்பிற்கு விரைவில் தமிழகத்தில் தடைவிதிக்கப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பெர்லின் தாக்கதலில் 12 பேர் பலி!
நிலையான கைத்தொழில் அபிவிருத்திக்காக இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் பல மில்லியன் டொலர் நிதியுதவி!
அதிகரிக்கும் போர் பதற்றம் : தனது நாட்டின் குடிமக்கள் அனைவரும் சவுதி அரேபியா விடுத்துள்ள அறிவுறுத்தல்...
|
|
|


