தங்க சுரங்கத்தில் சிக்கி 23 பேர் மாயம் – உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிப்பு!
Friday, February 15th, 2019
சிம்பாப்வே தலைநகர் ஹராரே அருகே கடோமா நகரில் உள்ள 2 சுரங்கங்களுக்கு அருகே கட்டப்பட்டிருந்த அணை உடைந்ததில் 23 தொழிலாளர்கள் அதில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் அனைவரும் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
இதில் தலைநகர் ஹராரேயில் இருந்து 145 கி.மீ. தொலைவில் உள்ள கடோமா நகருக்கு அருகே உள்ள 2 தங்க சுரங்கங்கள் நீண்ட காலமாக பயன்பாடின்றி கிடக்கின்றன.
இந்த சுரங்கங்களில் அண்மைக்காலமாக சிலர் சட்ட விரோதமாக நுழைந்து தங்க வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அந்த பகுதியில் பலத்த மழை பெய்ததால், சுரங்கங்களுக்கு அருகே கட்டப்பட்டு இருந்த அணை ஒன்று திடீரென உடைந்து அதிலிருந்து கரைபுரண்டு ஓடிய வெள்ளம் 2 சுரங்கங்களிலும் நிறைந்தது. இதில் 23 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து விரைந்த சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றி, தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106