வங்கக் கடலில் நிலநடுக்கம்!
Tuesday, February 12th, 2019
வங்கக் கடலில் இன்று(12) ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சென்னையில் சில இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னைக்கு வடகிழக்கே 609 கி.மீ தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவு கோலில் 4.9 அலகாக பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நிலநடுக்கம் காரணமாக எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
Related posts:
வடக்கு ஆளுநர் கல்வி அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!
காவல்துறைமா அதிபரின் அதிரடி பணிப்புரை!
அமெரிக்க நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள 3,065 இலங்கையர்கள்!
|
|
|


