தானியங்கி இயந்திரங்களின் ஊடாக பண மோசடி – விசாரணைகள் ஆரம்பம்!
Tuesday, February 5th, 2019
நாட்டின் சில பகுதிகளில் தானியங்கி(ATM) இயந்திரங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் பண மோசடி குறித்து பொலிஸ் தடுப்பு விசாரணை திணைக்களம், விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தானியங்கி இயந்திரங்களின் ஊடாக பண மோசடி இடம்பெற்றமை குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய ஒருவரை கைது செய்துள்ளதாகவும், குற்ற தடுப்பு விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த மோசடி வெளிநாட்டவர் ஒருவர் உள்ளடங்கிய குழு ஒன்றினால் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தானியங்கி இயந்திர நிலையங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சீ.சீ.டி.வி கமராக்கள் மூலம் சந்தேகத்திற்கிடமான முறையில், சிலரது புகைப்படங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதனை கொண்டு விசாரணைகளை நடத்தி வருவதாகவும், குற்றத் தடுப்பு விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
ஜனாதிபதியின் நிலைப்பாட்டை வரவேற்றுள்ள அரசாங்க மருத்துவர்கள் சங்கம்!
யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அரச உத்தியோகஸ்த்தர் உட்பட 16 பேருக்கு தொற்று உறுதி!
வடக்கின் இரண்டாவது பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் இன்றுமுதல் ஆரம்பம்!
|
|
|


