தாய்லாந்தில் 400க்கும் அதிகமான பாடசாலைகள் பூட்டப்பட்டன.!
Friday, February 1st, 2019
தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் வளி மாசடைந்துள்ளமை காரணமாக தாய்லாந்து தலைநகரின் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வளி மாசிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் வகையிலும், பெற்றோரினால் தனியார் வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்துவதனை தவிர்க்கும் வகையிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், இந்த வளி மாசடைவானது எதிர்வரும் திங்கட்கிழமை வரை தொடரும் என அதிகாரிகள் கூறியதையடுத்து, சுமார் 437 பாடசாலைகளை மூடுமாறு அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மக்கள் தமது வெளிப்புற செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு, அந்நாட்டு பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
அமெரிக்காவின் ஜனாதிபதியாக வெற்றிபெற்றுள்ள டிரம்புக்கு சீனா எச்சரிக்கை!
அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டிரம்ப் அறிவிப்பு!
இஸ்ரேலின் ‘அயன் டோம்’ கட்டமைப்பில் தோல்வி - இஸ்ரேல் இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஈரானின் ஏவுகணைகள்!
|
|
|


