மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை இலாபகரமானதாக்க நடவடிக்கை – மீன்பிடித்துறை அமைச்சு!
Thursday, January 31st, 2019
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை இலாபகரமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மீன்பிடித்துறை அமைச்சு மேற்கொள்ளவுள்ளது.
இதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுலாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்துக்கு உள்நாட்டில் 22 கொள்வனவு மற்றும் விற்பனை நிலையங்கள் உள்ளன.
அவற்றில் 8 நிலையங்கள் மாத்திரமே இலாபகரமாக இயங்குகின்றன.
மேலும் அதன் தலைமை அலுவலகத்தில் மாத்திரம் 244 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இவ்வாறு அதீத பணியாளர்களை கொண்டுள்ளமையும், மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் நட்ட நிலைமைக்கு காரணம் என்று மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
கல்விச் சான்றிதழ்: சர்வதேச அங்கீகாரத்தை மேலும் உறுதிப்படுத்த நடவடிக்கை !
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தல் உரிய காலப்பகுதியில் நடைபெறும் - தேர்தல்கள் ஆணையாளர...
இலங்கை - மியன்மார் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் மேம்படுத்த எதிர்பார்ப்பு - பிரதமர் தினேஷ் குணவர...
|
|
|


