வரலாறு காணாத வெப்பக் காற்று – 44 பேருக்கு தீவிர சிகிச்சை!
Saturday, January 26th, 2019
ஆஸ்திரேலியாவில் வெப்பக்காற்றின் தாக்குதல் கடுமையாக இருப்பதால் மக்கள் பல்வேறு வெப்ப நோய்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், இதுவரை 44 பேர் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகின்றனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அடிலெய்டு வடக்கு பகுதியில் நேற்று 49.5 டிகிரி சென்டிகிரேடு வெப்பம் பதிவாகியுள்ளது. இது 1939ஆம் ஆண்டில் பதிவான வெப்பத்தை விட அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பக்காற்றின் தாக்குதல் கடுமையாக உள்ளதனால் பலவிதமான வெப்ப நோய்களுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.
வெப்பக்காற்று தாக்குதலால் தெற்கு ஆஸ்திரேலியாவில் 90 குதிரைகள் உயிரிழந்துள்ளதுடன்,பல உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன.
பருவ நிலை மாற்றம் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாகி இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
எல்லையில் தடுப்புச் சுவர் கட்டியே தீருவேன்- டொனால்ட் ட்ரம்ப்!
பங்களாதேஷ் ரோஹிங்கிய அகதிகள் முகாமில் பாரிய தீ விபத்து ; பலர் உயிரிழப்பு, ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்...
காபூல் மசூதியில் குண்டுத்தாக்குதல் – 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு என தகவல்!
|
|
|


