அவசர நேரங்களில் மின்சாரத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் ஆராய குழு!
Sunday, July 3rd, 2016
அவசர நிலைமைகளின் போது மின்சாரத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நிபுணர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குழுவினால் அவசர நிலைமைகளின் போது தடையின்றி மக்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கு தேவையான பரிந்துரைகள் முன்வைக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன கூறினார்.
அத்துடன் அந்த அறிக்கையினை இந்த மாத நிறைவிற்குள் வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் ஏற்பட்ட வௌ்ளம் மண்சரிவு மற்றும் சாலாவ இராணுவ முகாம் வெடிப்புச் சம்பவத்தின் போது இலங்கை மின்சார சபையினால் குறித்த பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தாமரை மொட்டின் வெற்றி திருமலை மாகளின் குரலை நாடாளுமன்றிலும் ஒலிக்க வைக்கும் - யாழ் மாநகர முன்னாள் மு...
கொரோனா வைரஸ்: இதுவரை 3117 பலி - 90,922 பேர் பாதிப்பு!
சேதன பசளை உற்பத்திக்கான புதிய இயந்திரம் இராணுவத்தினரால் அறிமுகம்!
|
|
|


