திங்கள் முதல் கம்பனிப் பதிவுகள் அனைத்தும் ஒன்லைனில்!  

Friday, January 18th, 2019

கம்பனி பதிவுகளை மட்டுமே ஒன்லைனில் மேற்கொண்டு வந்த கம்பனி பதிவாளர் திணைக்களம், எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் அந்த நடைமுறையை மேலும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் நிறுவனங்கள், செயலாளர்கள், கணக்காய்வாளர்கள், சங்கங்கள் ஆகியவையும் ஒன்லைனில் பதிவுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் திணைக்கள நாயகம் ஆர்.எஸ்.சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.

 “கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கம்பனிகளை ஒன்லைன் மூலம் பதிவு செய்யும் நடவடிக்கைகளை கம்பனி பதிவாளர் திணைக்களம் ஆரம்பித்திருந்தது.

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த ஒன்லைன் விஸ்தரிப்பு திட்டத்திற்கு ரூபா 47 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாகவும், இந்த செலவீனங்கள் அனைத்தும் கம்பனி பதிவாளர் திணைக்களத்தினால் கிடைத்த இலாபத்தைக் கொண்டே செலவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய ஒன்லைன் நடைமுறை எதிர்வரும் மார்ச் மாத இறுதிக்குள் முழுமையான பயனை அளிக்க கூடியதாகவிருக்கும் எனவும் பதிவுக்கான ஆவணங்கள் ஒன்லைனில் பதிவேற்றப்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் உரிய நிறுவனங்கள் பதிவுக்குள்ளாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரை காலமும் இந்த நடைமுறைக்கு சுமார் 04 நாட்கள் வரையில் தேவைப்பட்டது எனவும், பதிவுகளை நாடிவருவோர் வீண் அலைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த பதிவுகள் ஒரு மணி நேரத்திற்குள் பூர்த்தி செய்யப்பட்டாலும், இணைய பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு பதிவு செய்தவர்களே நேரடியாக வந்து அந்த ஆவணங்களை நேரடியாக பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106