பலாலி இராணுவ முகாமில் பயிற்சிக்கு சென்ற இளைஞன் தற்கொலை!

Thursday, January 17th, 2019

யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமில் இராணுவ பயிற்சிக்கு வந்த இளைஞர் ஒருவர் தொலைத் தொடர்பு கேபிளினால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பலாங்கொடைப் பகுதியைச் சேர்ந்த  என்.ஜி.வை. ஆரியரட்ண (வயது 22) என்ற இளைஞனே இராணுவ முகாமில் உள்ள மரமொன்றில் நேற்று (16)  மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பலாலியில் அமைந்துள்ள இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பயிற்சி முகாமில் உள்ள மரமொன்றில் இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்த இளைஞன் தூக்கிட்டமைக்கான காரணம் தெரியவில்லை. சடலம் தொடர்பான விசாரணைகளை பலாலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக பலாலி இராணுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts:


தொடரும் வரட்சியான காலநிலை - நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்...
ஊடகவியலாளர்களால் யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்ட மூத்த ஊடகவியலாளர் தராகியின் 20 ஆம் ஆண்டு நினைவு தி...
மலையக மக்களுக்கு காணி உரிமம் வேண்டும் - இலங்கை எல்லைக்குள் சென்று மீன் பிடிப்பதும் ஏற்றுக்கொள்ள முடி...