சர்வதேச நாணய நிதியத்தின் குழு பெப்ரவரியில் இலங்கைக்கு – அமைச்சர் மங்கள சமரவீர!
Wednesday, January 16th, 2019
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று அடுத்த மாதமளவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நாணய நிதியத்தில் கடனை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகளை முன்னெடுக்கும் நோக்கில் அண்மையில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி கிறிஸ்ரின் லெகாட்டை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருடன் மிகவும் பயனுள்ள கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், முற்போக்கான பொருளாதார சீர்திருத்தங்களுக்கு இலங்கை தயாராக இருப்பதாகவும் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Related posts:
முச்சக்கரவண்டி சாரதி அனுமதிப்பத்திரம் : வயதெல்லையை உயர்த்துமாறு கோரிக்கை!
குறுந்தகவல் மூலம் EPF கணக்கு விபரங்கள் - அரசாங்கம்!
சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகை இம்மாதத்திற்குள் கிடைக்கும் - அமைச்சர் அலி சப்ர...
|
|
|


