2018 இல் இரண்டு ஐசிசி விருதுகளை பெற்றார் ஸ்மிருதி மந்தனா!

Thursday, January 3rd, 2019

2018 ஆம் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருது மற்றும் சிறந்த டி20 வீராங்கனை விருதையும் இந்திய அணியின் வீரங்கனை ஸ்மிருதி மந்தனா வென்றுள்ளார்.

2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீராங்கனை விருதுகளை ஐசிசி அறிவித்தது. அதில் ஸ்மிருதி மந்தனா இரண்டு விருதுகளை வென்றுள்ளார்.

இந்திய அணியில் அதிரடி வீராங்கனையாக உருவெடுத்தார் ஸ்மிருதி மந்தனா.

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் துவக்க வீராங்கனையாக களமிறங்கி எதிரணியை கதிகலங்க வைத்தார். அதற்கான பலனாக தற்போது ஐசிசி சிறந்த வீராங்கனை விருது வென்றுள்ளார்.

2018இல் மந்தனா 12 ஒருநாள் போட்டிகளில் ஆடி 669 ஓட்டங்கள் எடுத்துள்ளார்

இதன் சராசரி 66.90 ஆகும். 25 டி20 போட்டிகளில் ஆடி 622 ஓட்டங்கள் அடித்துள்ளார். டி20 போட்டிகளில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 130.67 ஆகும்.

அவுஸ்திரேலிய அணியின் அலிசா ஹீலி சிறந்த டி20 வீராங்கனை என்ற பட்டத்தை தட்டிச் சென்றார்.

இங்கிலாந்தின் சோஃபி எக்கலஸ்டோன் சிறந்த வளர்ந்து வரும் வீராங்கனை என்ற பட்டத்தை வென்றார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106