அரசாங்க ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்திய 2019!
Wednesday, January 2nd, 2019
இந்த ஆண்டு விடுமுறைகள் குறைந்த ஆண்டாக காணப்படுகின்றது.
23 பொது விடுமுறை தினங்களில் ஒன்பது விடுமுறைகள் வாரஇறுதி நாட்களில் வருவதனால் விடுமுறை தினங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
சித்திரைப் புத்தாண்டு சனி, ஞாயிறு தினங்களில் வருவதுடன், வெசாக், பௌர்ணமி விடுமுறையும் சனி, ஞாயிறு தினங்களில் வருகின்றன.
பௌர்ணமி தினங்கள், தீபாவளி பண்டிகை, நபிகளின் பிறந்த நாள் உள்ளிட்ட சில விடுமுறைகளும் ஞாயிறு தினங்களில் அமைந்துள்ளது.
20 வர்த்தக விடுமுறைகளில் எட்டு விடுமுறைகள் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் அமைந்துள்ளது.
இதனிடையே கடந்த ஆண்டில் 26 பொது விடுமுறை நாட்களில் நான்கு நாட்கள் மட்டுமே வார இறுதி நாட்களில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்ப நடவடிக்கை - சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு!
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பொறுப்புடன் செயற்படவில்லை - நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ குற்றச்சாட்டு!
கோழி இறைச்சி உற்பத்தி - இலங்கையில் கால்பதிக்கின்றது இந்திய நிறுவனங்கள் - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவ...
|
|
|


