தொடருந்தில் மோதி 27 கால்நடைகள் உயிரிழப்பு – கிளிநொச்சியில் சோகம்!
Tuesday, January 1st, 2019
கிளிநொச்சி – முறிகண்டி பிரதேசத்தில் நேற்று இரவு 27 கால்நடைகள் தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளன.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தொடருந்தில் மோதியே இவ்வாறு கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல விலங்குகள் அப்பகுதியில் உள்ள வீதிகள் மற்றும் தொடருந்து பாதையில் உலாவி வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உலாவி கொண்டிருந்த கால்நடைகளே தொடருந்தில் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
பொலிஸ் உயரதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாட்டு விசாரணை ஆரம்பம்!
இடமாற்றம் தொடர்பில் குழப்பமடைய வேண்டாம்!
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான தேவை அதிகரித்து வருகிறது - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவ...
|
|
|


