பாணால் வன்முறை வெடிப்பு – சூடானில் 19 பேர் பலி!
Friday, December 28th, 2018
சூடானில் பாணின் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைகளில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
சூடான் நாட்டில் பாண் உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாண் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 19 ஆம் திகதி முதல் பாண் விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், கடைகளை சூறையாடி அங்குள்ள பொருட்களை கொள்ளையடித்துச் செல்வதும் அதிகரித்துள்ளது.
போராட்டக்காரர்களை ஒடுக்க கலவர தடுப்பு பிரிவு காவல்துறையினர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த வன்முறைப் போராட்டங்கள் மற்றும் காவல்துறை நடவடிக்கைகளால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் 2 பேர் பாதுகாப்பு படையினர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பத்திரிகையாளர் சங்கமும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
தலைநகர் கர்த்தூம் உள்ளிட்ட சில பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். நாளை வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
போராட்டம் நடத்திய பத்திரிகையாளர்களில் சிலரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.
எதிர்வரும் நாட்களில் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழல் உருவாகியிருப்பதால் அனைத்து பகுதிகளிலும் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, போராட்டக்காரர்களுக்கு எதிரான அடக்குமுறை மற்றும் வன்முறைகளால் கடும் அதிருப்தி அடைந்த வடக்குமாநிலத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்.
இது ஆளும் கூட்டணிக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106