உள்ளூராட்சி சபைகளின் பொறுப்புகள் இன்று முதல் உள்ளூராட்சி ஆணையாளர்களிடம்!

Friday, July 1st, 2016

 

பதவிக்காலம் நிறைவடைந்த 23 உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்புகள் இன்றுமுதல் உள்ளூராட்சி ஆணையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மீண்டும் நடத்தப்படும்வரை அவற்றின் அதிகாரங்கள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், உள்ளூராட்சி மன்றங்களின் காலத்தை மீண்டும் நீடிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதை அடுத்து, அந்த உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்புகளை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய பாதுகாப்புச் சட்டம் - அமைச்சர் அலி சப்ரி உறுதியளிப்பு!
எக்ஸ்ப்ரஸ் பேர்ள் விவகாரம் - சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னம் தலைமையிலான அமைச்சரவை நியமித்த விசேட குழு...
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் - பரீட்சை திணைக்களம் தகவல்!