தேயிலையின் விலையில் வீழ்ச்சி!
Friday, December 21st, 2018
தேயிலையின் விலை தொடர்ச்சியாக குறைவடைந்து வருவதாக தேயிலை தரகர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
2017ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் 610 ரூபா 28 சதமாக நிலவிய தேயிலையின் விலை, நேற்று 536 ரூபா 69 சதமாக பதிவாகி இருகிறது.
இது 11 சதவீத விலை வீழ்ச்சியாகும்.
இதேநேரம் தேயிலை ஏற்றுமதி பெறுமதி 7 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 63 பில்லியன் ரூபாய் பெறுமதியான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டபோதும், இந்த முறை 58.7 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஏற்றுமதியே இடம்பெற்றிருப்பதாகவும் தேயிலைத் தரகு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகளை வழங்குமாறு தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு பிரதமர் மஹி...
மீண்டும் இந்தியா செல்கிறார் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச – நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறும் ஏற்பாடுகள...
திருத்தப் பணிகளுடன் தொடர்புடைய வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தல் 15 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படும...
|
|
|


