நாளைமுதல் வானிலையில் மாற்றம்!
Wednesday, December 19th, 2018
நாட்டில் காணப்படும் வரட்சியான வானிலையில் நாளையிலிருந்து சிறிய மாற்றம் எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணக் கரையோரப் பகுதிகளில் குறிப்பாக காலை வேளையில் பெய்யக் கூடிய சிறிதளவான மழை வீழ்ச்சியைத் தவிர நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை மற்றும் ஓரளவு குளிரான வானிலையும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் சில பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் எனவும் காற்றானது வடக்கு முதல் வடகிழக்கு வரையான திசைகளில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
Related posts:
14 இந்திய மீனவர்கள் கைது!
மே மாத கொடுப்பனவு வீடுகளுக்கே சென்று கொடுப்பதற்கு தீர்மானம் - விலகிக் கொள்வதாக கிராம உத்தியோகத்தர்கள...
இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் மே மாதம் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் ந...
|
|
|


