அரசியல்வாதிகளின் சுயநலத்தால் திரும்பிச் சென்றது இந்தியன் வீட்டுத்திட்டம் – ஜனாதிபதி!

Tuesday, December 18th, 2018

மக்களின் ஏழ்மை நிலைக்கு மோசடி நிறைந்த அரசியல்வாதிகள் பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மன்னாரி நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு இந்தியாவின் நிதியுதவியின் கீழ் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் காரணமாக இல்லாது போயுள்ளது.

ஐம்பதாயிரம் வீடுகளை அமைப்பதற்கு இந்திய வங்கியொன்றினால் கடன் வழங்கப்பட்டிருந்தது. அந்த வீடுகளை அமைப்பதில் அரசியல்வாதிகளுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளால், கடந்த நவம்பர் மாதம் 30ஆம் திகதி நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

அந்த வீட்டுத் திட்டத்தை முன்னெடுத்திருந்தால், 25 ஆயிரம் வீடுகளையேனும் நிறைவுசெய்திருக்க முடியும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன், வடகிழக்கில் 90 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

Related posts:

அமைச்சர்களின் வாகனங்கள் குறித்து வாராவாரம் அறிக்கை தேவை! பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு!
மருந்துக் கொள்வனவில் பாரிய மோசடி - ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தொடர்பில் திருப்தியடைய முடியாது ...
பொருளாதார மறுசீரமைப்பு சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரம...

கிளிநொச்சி கால்நடை வளர்ப்போர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர்...
பொருளாதார சவால்கள் இருந்தாலும் சுகாதாரத்துறை வீழ்ச்சியடையாது - சுகாதார அமைச்சர் நம்பிக்கை!
புலிகளுக்கு பிரித்தானியாவில் தொடரும் தடை – பிரித்தானியாவுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர்அலி சப்ரி!